சேலம் அருகே சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி தாண்டவனூரில் சக்தி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில், மாவிளக்கு எடுத்தல், பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.