சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 200 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை கொட்டி அழித்த மது விலக்கு போலீசார் இருவரை கைது செய்தனர்.
பாலமலை வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார், 200 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை கொட்டி அழித்து, இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.