மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைப்பது தொடர்பாக 8-வது ஊதிய கமிஷன் அமைப்பதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனால் 53 சதவீதமாக உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இனி 55 சதவீதமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.