மதுரை உசிலம்பட்டி அருகே படுகொலை செய்யப்பட்ட காவலரின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
உசிலம்பட்டியில் கொல்லப்பட்ட காவலர் முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படுமென உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடந்து, காவலர் முத்துக்குமாரின் உடல், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து கள்ளப்பட்டி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, 21 குண்டுகள் முழங்க முத்துக்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.