காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி பகுதியில், பாமக நிர்வாகியை காவலர் தாக்கியதாக குற்றம் சாட்டி, அக்கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
உப்பேரிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரின் குடும்ப பிரச்சனை குறித்து புகாரளிப்பதற்காக வந்தபோது, காஞ்சிபுரம் பாமக பகுதி செயலாளர் பூபாலனை, சிவகாஞ்சி நிலைய எழுத்தர் சரவணன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, இரவு நேரத்தில் ஏராளமான பாமகவினர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதுதொடர்பாக, சிவகாஞ்சி காவல் நிலைய எழுத்தர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.