செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் பகுதியில் நியாய விலைக் கடை இல்லாததால் கிராம மக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.
அஞ்சூர் பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமப் பகுதியில் ரேஷன் கடை இல்லாததால் வெகு தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரேஷன் பொருட்களை வாங்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லும் முதியவர்கள், அவ்வப்போது மயங்கிவிழுவதாகத் தெரிவிக்கின்றனர். எனவே தங்கள் பகுதியில் நியாய விலைக் கடை செயல்பட அரசு வழிவகை செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.