திருப்பூரில் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் சார்பில் 500 பயனாளிகளுக்கு நவீன கருவிகள் வழங்கப்பட்டன.
நாடு முழுவதும் பொதுமக்களுக்குக் காதியின் சார்பில் பல்வேறு நவீன கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மும்பையில் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாகத் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த 500 பயனாளிகளுக்குப் பனை வெல்லம் தயாரிக்கும் இயந்திரம், எண்ணெய் செக்கு உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் வழங்கப்பட்டன.