மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவின் மணிப்பூர் எல்லையில் அமைந்துள்ள மியான்மர் நாட்டில் நேற்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இது ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 7, 6 புள்ளி 4-ஆக பதிவாகின. இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் அமைந்துள்ள கட்டடங்கள் சீட்டு கட்டுகளை போல சரிந்தன.
வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் இருந்த மக்கள் செய்வதறியாது வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.