மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் பணி முடிந்து மது அருந்துவதற்காக முத்தையன் பட்டியில் உள்ள மதுக் கடைக்குச் சென்றார்.
அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் முத்துக்குமாரை, கஞ்சா வழக்கில் சிறை சென்ற பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கல்லால் தாக்கி கொலை செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பொன்வண்ணனை தேடி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் வனப் பகுதியில் பதுங்கியிருந்த பொன்வண்ணனை சுற்றி வளைத்த போலீசார், அவரை சுட்டுக் கொன்றனர்.