சேலம் சாமிநாதபுரத்தில் பொதுமக்களை அவதூறாகப் பேசிய ரேஷன் கடை ஊழியர் குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
சேலம் சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் வெண்ணிலா. இவர் பொதுமக்களை அவதூறாகப் பேசுவதாகவும், ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் செய்தி வெளியான ஒரு மணி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர் வெண்ணிலாவைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.