பிரதமர் நரேந்திர மோடி அரசின் முயற்சிகளால் இதுவரை வெளிநாட்டுச் சிறைகளிலிருந்த 10 ஆயிரம் இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்தது.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அரசு, கடந்த 2014-ம் ஆண்டு முதல் தனது ராஜதந்திர முயற்சிகளால் இந்தியர்களை விடுவித்து வருவது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த 2014 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது சிறைகளில் உள்ள இந்தியர்களை விடுவித்து வருவது குறிப்பிடத்தக்கது.