சென்னை பெரும்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் தயாரித்த சிறிய ரக மாதிரி செயற்கைக்கோள் பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
பெரும்பாக்கத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறிய ரக செயற்கைக்கோள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
அதன்படி 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்ந்து, 2 சிறிய ரக மாதிரி செயற்கைக்கோள்களைத் தயாரித்தனர். தொடர்ந்து அதனை பலூன் மூலம் விண்ணில் செலுத்தினர்.