சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி மீது கார் மோதிய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
அரசிராமணி பகுதியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி ஆசிரியர் மணி, சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இருந்து அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த ஆசிரியர் மணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியர் மணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்த நிலையில், விபத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வெளியாகியுள்ளது.