நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்ட இடத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக போலீசார் விசாரணை நடத்தினர்.
நெல்லை மாவட்டம் மதவக்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். மேலும், மருத்துவ கழிவுகளைக் கொட்டி எரித்த மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அதேபோன்ற மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.