டெல்லியில் பாஜக மகளிரணி சார்பில் ராணி வேலு நாச்சியார் குறித்த டிஜிட்டல் புத்தகம் வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் 75 துணிச்சலான பெண்களின் பங்களிப்புகளை முன்னிறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக மகளிரணி நடத்தி வருகிறது. அந்த வகையில் ராணி வேலு நாச்சியாரின் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் “வீராங்கனா” என்ற டிஜிட்டல் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன், வேலு நாச்சியாரின் வரலாறை இந்தியாவே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.