யுகாதி திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழியுடனும், தமிழ் மக்களுடனும் இரண்டறக் கலந்து, நம் மண்ணுக்கும், கலாச்சாரத்துக்கும் பெருமை சேர்த்து, சகோதரத்துவம் பேணும் நம் தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு, பாஜக சார்பாக இனிய யுகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தாண்டு, அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகவும், அன்பும், அமைதியும் நிலவ வசந்த காலத்தின் தொடக்க நாளான இந்த யுகாதி நன்னாள் அமையட்டும் என அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.