ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் போட்டியில் மும்பை அணியை குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நரேந்திர மோடி மைதானத்தில் முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்ஷன், கேப்டன் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆடத்தை வெளிப்படுத்தினர்.
சுப்மன் கில் 38 ரன்களும், சாய் சுதர்ஷன் 41 பந்துகளில் 63 ரன்களும் விளாசினர். அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லரும் 24 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். இதனால், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.