ஒசூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
ஒசூர் பேருந்து நிலையத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின் பராமரிப்பின்றி காணப்படும் இந்த அறை, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
எனவே, தாய்மார்கள் பாலூட்டும் அறையை அரசு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.