கோவை L&T பைபாஸ் சாலை தரம் உயர்த்தும் பணிக்காக ஜூன் 1ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கோவை அவிநாசி சாலையில், நீலம்பூரில் இருந்து மதுக்கரை வரை 28 கிலோமீட்டருக்கு இந்த பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை 4 வழிச் சாலையாக தரம் உயர்த்தும் பொருட்டு, இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஜூன் 1ஆம் தேதி முதல் சுங்கவரி வசூலை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தொடங்க உள்ளது.