கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் நிலைகள் பராமரிப்பின்றி கிடப்பதாகவும், தடுப்பணையின் மதகுகள் சேதமடைந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெடுங்கல் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும், மதகுகள் சேதமடைந்து இருப்பதால் ஏரியில் உள்ள தண்ணீர் வீணாகி வருகிறது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் பராமரிப்பின்றி இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பேட்டியளித்த பாஜக மாவட்ட தலைவர் கவியரசு, கிருஷ்ணகிரியில் உள்ள நீர்நிலைகளை பராமரிக்காமல் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மக்கள் மீது சிறிதும் அக்கறை இன்றி தமிழக அரசு செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், மாவட்டம் முழுவதும் ஒரு கால்வாயை கூட அரசு தூர்வாரவில்லை என்றும் தெரிவித்தார்.