கம்பராமாயணம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின், தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கம்ப ராமாயண விழா நடைபெற்றது.
இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், கம்பர் பிறந்த புனிதமான இடத்திற்கு தான் வந்தது புனித யாத்திரை போன்றது என தெரிவித்தார். கம்பரைப் பற்றி இளைஞர்களுக்கு தெரியாதது தனக்கு வருத்தம் அளிப்பதாக வேதனை தெரிவித்த அவர், கம்பராமாயணம் நாட்டில் உள்ள அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக கூறினார். மேலும், நமது கலாசாரம், பாரம்பரியம், ஆன்மிகத்திற்கு கம்பரின் பங்களிப்பு மிகப்பெரியது என்றும் ஆளுநர் புகழாரம் சூட்டினார்.