திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு, மருமகன் கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வாணியம்பாடியை சேர்ந்த வினோதினி என்பவர் லோன் பெற்று கறவை மாடு வாங்கியதாகவும், இதன் காரணமாக கணவருடன் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து வினோதினி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் வெங்கடேசன் வினோதினியை தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், வெங்கடேசன் தனது மாமியார் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக பேனர் அடித்துள்ளார். இதுதொடர்பாக வினோதினி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.