சென்னையில் இன்று சொத்து வரியை செலுத்த தவறினால், ஒரு சதவீத அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் உள்ளவர்கள் சொத்து வரி செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே சொத்து வரி செலுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சொத்து வரி செலுத்தவில்லை என்றால் ஒரு சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், வரி பாக்கியை மாநகராட்சி அலுவலகங்கள், இ-சேவை மையங்கள், இணையதளம் மூலமாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.