அரசின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இந்தியா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 11 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அமெரிக்க அரசுக்கு எதிரான வெளிநாட்டு மாணவர்களின் போராட்டத்தை இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்கள் கண்டு கொள்ளாத நிலையில், டிரம்ப் இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் வெளிநாட்டு மாணவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம் மாணவர்களின் பெயரைக் கண்டறிந்து அவர்களுக்கு இ-மெயில் அனுப்பப்படுகிறது.
அதில், தேச விரோத செயல்களுக்காக மாணவரின் விசா ரத்து செய்யப்படுகிறது என்றும், உடனடியாக நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.