நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே ஆதிதிராவிட மகாஜன சங்க கூட்டத்தில் வரவு-செலவு குறித்து நிர்வாகிகள் கேள்வி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாளையங்கோட்டை அருகே சமாதானபுரத்தில் ஆதிதிராவிட மகாஜன சங்கம் சார்பில் 30வது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
பொருளாளர் செல்வகுமார் சங்கத்தின் வரவு – செலவு கணக்கை வாசித்தபோது வங்கிக் கணக்கு புத்தகத்தைக் காண்பிக்க வேண்டும் எனச் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், பொருளாளர் மறுத்து விட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.