கன்னியாகுமரி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிகழ்ச்சியில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அருமனை அருகே புண்ணியம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-ம் அகில இந்திய மாநாடு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சியாம் குமார் என்பவர், இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்த நிலையில், நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மற்றும் இந்து அமைப்பினர் அருமனை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.