வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கில் இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொண்டு 13 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் அமலில் உள்ள இச்சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாகாலாந்தில் 8 மாவட்டங்கள் மற்றும் 5 மாவட்டங்களில் 21 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள், அருணாசலபிரதேசத்தில் 3 மாவட்டங்களில் அமலில் உள்ள ஆயுத படைகள் சிறப்புச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.