ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், சீஸ் தொப்பியுடன் மேடையில் வலம் வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
விஸ்கான்சினில் நடந்த நிகழ்ச்சியின்போது இந்த விநோத சம்பவம் நடந்துள்ளது. மேலும் தாம் அணிந்திருந்த தொப்பியில் கையெழுத்திட்டு பார்வையாளர்கள் நோக்கி வீசினார்.
இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.