அமெரிக்காவின் வட கரோலினாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
வட கரோலினாவின் சலுடா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தீப்பற்றியது. வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளது. பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.