கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது எனக் கூறி நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது எனக் கூறி விவசாயிகள் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து இரண்டாவது அனல்மின் நிலையத்திற்குப் பூட்டுப் போட முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.