நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகள் தென்மாவட்ட மக்களின் குடிநீர், விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக விளங்குகின்றன.
இந்நிலையில் வெப்பநிலை அதிகரிப்பால், 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் தற்போது 96 கன அடியாகக் குறைந்துள்ளது. இதனால், மே , ஜூன், ஜூலை மாதங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம் உள்ளது.