ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 16 புள்ளி 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12 புள்ளி 5 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரிக்கெல்டன் 62 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் நடப்பு தொடரில் மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.