ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 3 நாட்கள் கொண்டாடப்படும் கங்கௌர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக தொடங்கியது.
சைத்ரா புத்தாண்டையொட்டி ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கங்கௌர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்து கடவுளான சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை போற்றும் வகையில் கொண்டாடப்படும் கங்கௌர் திருவிழா ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பெண்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.