டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, சமய்பூர் பத்லி பகுதியில் நடைபெற்று வரும் சாலை கட்டுமானப் பணிகளை நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுபன் சௌக் முதல் முகர்பா சௌக் வரை பனிரெண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பருவமழை தொடங்கும் முன் சாலைகளை சீரமைப்பதே பாஜக அரசின் இலக்கு என்று தெரிவித்தார்.