செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவிலில் கார் மீது கனரக லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னையில் சுப நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றுவிட்டு, காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.
சிங்கபெருமாள்கோவில் சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த கனரக லாரி மோதியதில், முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.