திமுகவும், ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திமுக ஊழல் செய்யாத துறையே இல்லை என்றும், திமுகவின் ஊழல் குறித்த செய்தி வராத நாளே இல்லை என தெரிவித்துள்ளார்.
திமுகவும், ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் என்றும், திமுகவும், ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும ஹெச்.ராஜா, கூறியுள்ளார்.
மேலும் திராவிட மாடல் ஆட்சியின் செய்திகளை வெளியிட கோபாலபுரம் எக்ஸ்பிரஸ் மும்மொழிகளில் பத்திரிக்கை வெளியிடலாம்? ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் மும்மொழி கல்வி கற்பிக்கக்கூடாதா? என்றும் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.