ஈரோடு அருகே, லாரியை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டி, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
சென்னி மலை மேலப்பாளையம் சரவணா நகரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்றார். சென்னி மலை பேருந்து நிலையம் அருகே தெற்கு ராஜவீதி வழியாகச் சென்று கொண்டிருந்த அவர், முன்னே சென்ற லாரியை முந்த முயன்றார்.
அப்போது, நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த அவர், லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.