கர்நாடகாவில் வங்கியில் இருந்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாவணகெரே மாவட்டத்திலுள்ள நாமதியின் தெருவில் எஸ்.பி.ஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வங்கியில் நுழைந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைத்து 30 லட்சம் ரூபாய் பணம், 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நாமதி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை சம்பவத்தில் தமிழக இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடித்த போலீசார், தனிப்படை அமைத்து மதுரையில் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்கள் பாழடைந்த கிணறு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளையும் போலீசார் மீட்டனர்.