சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வனவாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் முன்னிலையில் இளைஞர்கள் பலர் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களை பாஜக துண்டு அணிவித்து வரவேற்ற ஹரிராமன், பின்னர் அடையாள உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.