2030ஆம் ஆண்டு மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், தானேவில் மின் மிதிவண்டி அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் மிகப்பெரும் சவாலாகச் சுற்றுச்சூழல் மாசு உள்ளதாகக் கூறினார்.
சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க புதை படிவ எரிபொருள்களுக்குப் பதிலாக மின் வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.