பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நாளை நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும் நிலையில், ஏப்ரல் மாத பராமரிப்பு பணிக்காக நாளை நிறுத்தப்படுகிறது.
பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் மூலமாக மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.