தேனியில் சத்துணவு பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்த 2 ஆசிரியர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனிச்செட்டிப்பட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் குபேந்திரன் ஆகிய ஆசிரியர்கள் செல்போன் மூலமும், நேரிலும் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரின் பேரில் ஆசிரியர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக, பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.