திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் போதையில் இருந்த நண்பரைக் கொலை செய்து ஏரியில் வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறைச் சேர்ந்த ஜெமினி என்பவர் கார் ஓட்டுனராக இருந்து வந்தார். கடந்த 28-ம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்ற ஜெமினி மீண்டும் வீடு திரும்பாத நிலையில், அவரது தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
விசாரணையில் புளியரம்பாக்கம் ஏரியில் மது மற்றும் கஞ்சா அருந்தி மயங்கிக் கிடந்த ஜெமினியை, அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்து ஏரியில் தூக்கி வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்தை எரித்தது மற்றும் போதை ஊசி விவகாரம் தொடர்பாக இருந்த முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது.
இதனையடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய அக்னி, கார்த்தி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூவரையும் தேடி வருகின்றனர்.