ஜார்கண்டில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில், ரயில் ஓட்டுநர்கள் உள்பட மூவர் பலியாகினர்.
ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பார்ஹத் எம்.டி. ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன் மீது பராக்கா-லால்மதியா நோக்கி நிலக்கரி ஏற்றி வந்த மற்றொரு சரக்கு ரயில் அதிவேகத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இரண்டு ரயில்களுக்கு இடையேயான சிக்னல் தொடர்பு சரிவரக் கிடைக்கப்பெறாததே விபத்திற்கான காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் இரு ரயில்களின் ஓட்டுநர்கள் உள்பட மூவர் பலியாகினர். மேலும், ரயில்வே பணியாளர்கள் 5 பேர் உள்பட பலர் காயமடைந்தனர்.