பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருவதையொட்டி அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் தூக்கு பாலத்தின் திறப்பு விழா வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பாலத்தை திறந்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து ராமேஸ்வரத்தில் ரயில்வே துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் பதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.