பங்குனி மாத கிருத்திகையினையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி மாத கிருத்திகையினையொட்டி வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், படிமாலை அலங்காரத்திலும், உற்சவர் கோடையாண்டவர், வீராசன மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.