குஜராத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமையன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையை செய்து வந்தனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் தீ மளமளவென பரவியது. மேலும், அந்த ஆலையின் மேற்கூரை இடிந்து தரைமட்டமானது. இந்த வெடிவிபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
















