அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், வேதாளம் படத்தில் நடித்த நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாபா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தை சேர்ந்த ஷர்மிளா தாபா, நடன உதவி இயக்குனர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு அளித்த முகவரியில் முறைகேடு இருப்பதாக கூறி ஷர்மிளா தாபா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.