காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 10 நாட்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான தகவலின் படி, கடந்த 18 மாதங்களில் 15 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்றும், 34 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 322 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும், குழந்தைகள் பலி எண்ணிக்கை உயர்வது கவலை அளிப்பதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.