புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணிநேரமும் மது கிடைக்கும் எனப் பார் ஊழியர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
தாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கேசராப்பட்டியில் மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு இரவில் மது வாங்கச் சென்ற நபர் ஒருவர், கடை எப்போது மூடப்படும் என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பார் ஊழியர், 24 மணி நேரமும் மது கிடைக்கும் என்றும், எப்போது வேண்டுமானாலும் மது வாங்கி செல்லலாம் எனவும் பதிலளித்தார்.
மதுபான கடைகள் இயங்க பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 24 மணி நேரமும் மது விற்கப்படும் என ஊழியர் பேசும் வீடியோ பேசுபொருளாகியுள்ளது.